I read this story long long ago in a old Tamil magazine called Janavinodini priced at four annas per monthly issue.
நீங்க அவனை மாதிரி கருமியை பார்த்தே இருக்கமுடியாது. தினமும் ராத்திரி 12 மணிக்குத்தான் கோவிலுக்கு போவான்.அப்போதான் குருக்களுக்கு தக்ஷிணை கொடுக்கவேண்டாம்.யாருக்கும் பைசா போடவேண்டாம். ஒரு நாள் ராத்திரி கோவிலில் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. யாரோ பூஜை செய்யும் சத்தமும் கேட்டது. அவன் ஒளிந்துகொண்டு பார்த்தான். உள்ளே தேவேந்திரன் பூஜை செய்துகொண்டு இருந்தான்.
அவனுக்கு ஏதோ ஒரு ஓசி புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. நமக்கு ஓரு ரூபா என்றால் தேவர்களுக்கு லக்ஷம் ரூபா. நமக்கு ஒரு கிலோ என்றால் தேவர்களுக்கு ஆயிரம் கிலோ. சைலண்டா ஒரு ஓரமா மறைவாக நின்றான். இந்திரன் வெளியே வரும்போது லபக் என்று பிடித்துக்கொண்டான்."ஐயா தர்மம் பண்ணுங்க ஐயா. ".
இந்திரனுக்கு ஒன்றும் புரியலே. இந்திரன் கேட்டான் "நீ யார்? உனக்கு என்ன வேண்டும்".
"ஐயா எனக்கு ஒரு ரூபா தர்மம் பண்ணுங்க ஐயா"
"சரி இங்கேயே இரு. பர்ஸை தேர்ல வேச்சிருக்கேன்.ஒரு நிமிஷத்துலே** கொண்டு வரேன்"
**அதே ஓசி புத்தகத்தில் போட்டிருந்தது " தேவர்களுக்கு ஒரு நிமிஷம் என்றால் நமக்கு ஓரு லக்ஷம் நிமிஷம்"
There is a lot of explanations to theory of relativity. The simple story above explains about the dimension of time.
சரஸ்வதி நிவாஸ் நினைவுகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக